Pages - Menu

Sunday, December 29, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுயம்வரகலா பார்வதி யாகம் சிறப்பாக நடைபெற்றது…

திருமணமாகாத பெண்களின் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது.

இந்த ஹோமம் தன்வந்திரி பீடத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ப்ரத்யங்கிரா யாகசாலையில் வைத்து நடைபெற்றது இன்னும் சிறப்பு ஆகும். வருகிற புத்தாண்டு தினத்தில் 2014 பூசணிக்காய் கொண்டு நடைபெற இருக்கிற ஹோமத்திற்கு, சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்ட பெண்கள் பூசணிக்காய் கொடுத்து சிறப்பு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர்.

மேலும் இந்த ஹோமத்தில் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து  பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பங்கேற்றனர்.

மேலும் உலக நலன் கருதி புத்தாண்டை முன்னிட்டு 01.01.2013 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 2014 பூசணிக்காய் கொண்டு நடத்தும் த்ருஷ்டி துர்கா, ஸ்ரீ குபேர லட்சுமி, மஹா தன்வந்திரி ஹோமங்களில் பங்கேற்று பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.





No comments:

Post a Comment