Pages - Menu

Thursday, December 19, 2013

தன்வந்திரி பீடத்தில் கணபதி ஹோமத்துடன் ப்ரத்யங்கிரா ஹோமம் சிறப்பாக நடைபெற்றது...











தன்வந்திரி பீடத்தின் 10ஆம் ஆண்டை முன்னிட்டும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 54வது ஜெயந்தியை முன்னிட்டும் உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் அருகில் 30,000 சதுர அடியில் பிரம்மாண்ட மண்டபம் அமைத்து, 16 அடி விட்டமும், 12 அடி ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்து இன்று 19.12.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறந்த வேதவிற்ப்பன்னர்களைக் கொண்டு கோ பூஜையுடன், வாஞ்சாகல்பலதா கணபதி ஹோமம், சகல தேவதா காயத்ரி ஹோமம் ஆகிய ஹோமங்களை இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் இந்த ஹோமத்தில் வாலாஜாபேட்டை நகர மன்ற தலைவர் W.S.வேதகிரி, W.S.மணி, நகரமன்ற உறுப்பினர் W.G.முரளி, ஒன்றியகுழு உறுப்பினர் அனந்தலை பிச்சை மற்றும் டாக்டர் தொப்ப கவுண்டர், டாக்டர் ரங்கராஜ், சென்னை, தொழிலதிபர் பாஸ்கரன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

பிரசாத விநியோகமும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணியளவில் தீபசண்டி ஹோமமும், வேத பாராயணமும் நடைபெற்றது. மேலும் 20.12.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சூலினி துர்கா ஹோமத்துடன் ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. இதில் பாலமதி சுவாமிகளும், சாந்தா சுவாமிகளும், மேல் சித்தாமூர் ஜீன மடாதிபதி மற்றும் இராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. முகமது ஜான் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment