Pages - Menu

Tuesday, December 3, 2013

அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது...

டிசம்பர் 2ம் தேதி திங்கட்கிழமை அன்று அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் உலக நலன் கருதி சூலினிதுர்கா ஹோமம், பைரவர் ஹோமம், சத்ரு சம்கார ஹோமம் போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு கூட்டு ப்ராத்தனை செய்தனர். பின்னர் பீடத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்த்தினி, பைரவர் மற்றும் கார்த்திகை குமரன் ஆகிய தெய்வங்களுக்கு முறையே கலசாபிஷேம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment