Pages - Menu

Monday, December 23, 2013

நிகும்பலா ஹோமத்துடன் மங்கள ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற்றது...

தொடர்ந்து 5வது நாளாக 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா ஹோமத்துடன் மங்கள ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற்றது.


டிசம்பர் 23.12.2013 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் 5வது நாளாக நிகும்பலா ஹோமத்துடன்  மங்கள ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் காலையும், மாலையும் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் அனைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலையரசு மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஹோமத்தில் ஆயிரம் கிலோ மிளகாய், பூசணிக்காய், மஞ்சள், குங்குமம், நவதான்யங்கள், வேப்பெண்ணெய், பட்டு வஸ்த்திரங்கள் மற்றும் மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டன.

மேலும் மாலையில் முன்னாள் அமைச்சர், இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான A.முகமதுஜான் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். பிரசாதமும் வழங்கப்பட்டது.

மேலும் 24.12.2013 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் நவதுர்கா ஹோமத்துடன் ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment