Pages - Menu

Friday, December 20, 2013

தன்வந்திரி பீடத்தில் இரண்டாம் நாள் சூலினி துர்கா ஹோமத்துடன் ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…







டிசம்பர் 20.12.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் 2வது நாளாக சூலினி துர்கா ஹோமத்துடன் ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் காலையும், மாலையும் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் திருவலம் சாந்தா ஸ்வாமிகள், யோகி சங்கரகுருஜி, வேலூர் சகஸ்ர ஆஞ்சநேய கோயில் ஸ்வாமிகள் மற்றும் கே.எஸ்.உதயசங்கர், ஸ்ரீ துர்காபவன், வேலூர்; எஸ்.வி. கோபாலாகிருஷ்ணன், மாயவரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஹோமத்தில் ஆயிரம் கிலோ மிளகாய், பூசணிக்காய், மஞ்சள், குங்குமம், நவதான்யங்கள், பட்டு வஸ்த்திரங்கள் மற்றும் மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த ஹோமத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். பிரசாதமும் வழங்கப்பட்டது.

மேலும் 21.12.2013 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சாந்தி துர்கா ஹோமத்துடன் சரப ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. இதில் இராணிப்பேட்டை கோட்டாட்சியர் டாக்டர். மு. பிரியதர்ஷினி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment