Pages - Menu

Saturday, December 14, 2013

தன்வந்திரி பீடத்தில் 10 ஆம் ஆண்டை முன்னிட்டு 108 குண்டங்களில் சிறப்பு ஹோமங்கள்

டிசம்பர் 14ம் தேதி வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 10ஆம் ஆண்டு சுமங்கலிகளின் நலன் கருதி சுமங்கலி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 108 சுமங்கலிகள் கலந்துகொண்டனர். அவ்வமயம் வருகை தந்த பக்தர்கள் சுமங்கலியிடம் ஆசிகள் பெற்றனர்.
சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் மாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, கண்ணாடி, கண்மை, மஞ்சள், குங்குமம் மற்றும் புடவை, ரவிக்கை துணி வழங்கப்பட்டது. மேலும் தன்வந்திரி மூலவருக்கு பெண்கள் தைலாபிஷேகம் செய்தனர். சுகாசினிகள் தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்க வேண்டியும், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்யமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.


மேலும் நாளை 15.12.2013 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 108 குண்டங்களில் 108 நபர்கள் கலந்து கொள்ளும் மஹா தன்வந்திரி ஹோமமும், 108 கலசங்களில் 108 வகையான மூலிகைகளை கொண்டு மூலவர் தன்வந்திரிக்கு மஹா அபிஷேகமும் பின்னர் மாலை 5.00 மணியளவில் 108 பெண்கள் கலந்து கொள்ளும் குபேரலட்சுமி யாகமும், ஐஸ்வர்ய பூஜையும் நடைபெறுகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பாண்டிச்சேரி தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகிறார்கள் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.



No comments:

Post a Comment