Pages - Menu

Tuesday, November 19, 2013

ராக யக்ஞம் சிறப்பாக நடைபெற்ற காட்சி...

நவம்பர் 17, 2013 காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் உலக கலைஞர்களின் நலன் கருதி சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு ராக யக்ஞம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த யக்ஞத்தில் ஆன்மிக பாடகர்களான மேட்டூர் பிரதர்ஸ் கலந்து கொண்டு 16 வகையான ராகங்களில் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் பாடல்களை பாடி பரவசப்படுத்தினார்கள். 

மேலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரை வழங்கினார். இந்த யக்ஞத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.

ராக யக்ஞத்தின் காட்சிகள் இங்கே...





No comments:

Post a Comment