Pages - Menu

Monday, November 4, 2013

ராக யக்ஞம்

உலகிலேயே முதன் முறையாக இதுவரை யாருமே சிந்தித்துக் கூட பார்க்காத முறையிலே ராகங்களையும், ராகத்திற்குறிய தேவதைகளையும் கொண்டு உலகத்து நலனுக்காகவும், உலக மக்களின் ஷேமத்திற்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் ஒப்புயர்வற்ற யாகமே இந்த ராக யக்ஞம்.

சீருடன் கூடிய செவிக்கு இனிமை தரக்கூடிய ஓசையே நாதம் ஆகும், ‘நா’ என்றால் காற்று ‘த’ என்றால் நெருப்பு, எனவே காற்றும் நெருப்பும் கலந்த கலவையே நாதம். நாதமே சங்கீதத்திற்கு ஆதாரம், ஒரு மனிதனின் நாபிக்குக் கீழே திரிகோண வடிவுள்ள மூன்று இதழ்களுடன் கூடிய ப்ரம்மரந்தம் எனும் மூலாதாரத்தில் பிராணவாயு நிறைந்துள்ளது. ஒரு ஆத்மா நாதத்தை எழுப்ப விரும்பும் பொழுது, மனம் தேகத்தில் உள்ள காற்றை ஒன்று திரட்டி, மூலாதாரத்தில் உள்ள அக்னியை தூண்ட காற்று அந்த அக்னி ஜ்வாலையால் வேகமாக வெளியே தள்ள பட தொப்புள், நெஞ்சு, கழுத்து, தலை வாய் வழியாக வெளி வரும் காற்று நாதமாக பிறக்கிறது.

இந்த நாதம் இறைவனின் வடிவம். இதை ஒரு மந்திரம் மிக அழகாக கூறுகிறது.

“நநாதேன வினா கீதம் நநாதேன வினா ஸ்வர:
நநாதேன வினா ந்ருத்தம் தஸ்மாத் நாதாத்மஹம் ஜகத்
நாதரூப: ஸ்ம்ருதோ ப்ரம்மா நாதரூபோ ஜனார்தனா
நாதரூபா பராசக்தி: நாதரூபோ மஹேஸ்வரா:
நாதோபாஸனயா தேவா ப்ரம்மா விஷ்ணு மகேஸ்வரா
பவனத்யுபாஸிதா நூனம் யஸ்மாத் ஏதே ததாத் மஹா”

அதாவது நாதத்திலிருந்து கீதங்களும், ஸ்வரங்களும், நர்த்தனமும் பிறக்கின்றது. ப்ரம்மா, சிவன், பராசக்தி, மஹா விஷ்ணு இவர்கள் அனைவரும் நாத வடிவில் இருக்கின்றனர். எவன் ஒருவன் இவர்களை நாதத்தால் உபாசிக்கிறானோ, அவன் பெரும்பேறு அடைவான்.

இப்படிப்பட்ட பெருமையுடைய நாதத்தால் பிறந்த ராகங்களைக் கொண்டு நடத்தப்படும் யக்ஞத்தின் சிறப்பை சொல்ல அளவில்லை. நாத ப்ரவாகமான இறைவனை அவன் விரும்பும் ராகங்களை கொண்டு ஹோமங்கள் செய்யும் பொழுது, இறைவன் மனம் மகிழ்ந்து நாம் கேட்பது அனைத்தையும் கொடுப்பான். மனப்பிணி, உடல்பிணி, கடன் தொல்லை, குழந்தைபேறு இல்லாமை, திருமணத்தடை, களவு பயம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் நிவாரணம் கிடைக்கும். மேலும் கல்வி, செல்வம், வீரம் முதலான பதினாறு வகையான பேறுகளும் குறைவற கிட்டும்.

இதன்மூலம் பலவிதமான நோய்களை தீர்ப்பதில் ராகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ராகங்களைக் கொண்டு நோய்களை தீர்க்கும் வைத்திய முறைகள் பல உள்ளன. அந்த வகையில் யாகங்களைக் கொண்டு நோய் தீர்க்கும் பீடமான தன்வந்திரி பீடத்தில் ராகங்கள் கொண்டு யாகங்கள் நடத்துவது சிறப்பிலும் சிறப்பு.

சுத்தமத்யம ராகங்கள் 36ம், ப்ரதிமத்யம ராகங்கள் 36ம் 12 சக்கரங்களால் பிரிக்கப்பட அந்த ராகங்களின் ஜன்யங்களான 16 ராகங்களைக் கொண்டு 16 விதமான தேவதைகளை ஆவாஹனம் செய்து 16 விதமான ஹோமங்கள் நடைபெற உள்ளது.

இலங்காபுரி அரசன் இராவணன் தன்னுடைய ராகங்களால் யாராலும் எதிர்க்க முடியாத வரங்களை பெற்றான் என்பது வரலாறு. அந்த வரலாற்றை மீண்டும் துவக்கி இருக்கிறார் நம்முடைய கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இது நாம்பெற்ற பெரும்பேறு. காணக்கிடைக்காத இந்த யாகத்தை அனைவரும் கலந்துகொண்டு இறைவனின் பேரன்பிற்கு பாத்திரமாகுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்
நாள் : 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை
இடம் : தன்வந்திரி பீடம், வாலாஜாபேட்டை

காலை 10.00 மணிக்கு
மாதா பிதாவிற்கு ராக முறையில் அர்ச்சனை (ஹம்ஸத்வனி)
குருவிற்கு – கௌரி மனோகரி
தன்வந்திரி கணபதி – நாட்டை
பஞ்சபூதங்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரகங்கள் – சிந்துபைரவி
ப்ரம்மா – தோடி
ஸரஸ்வதி – ஸரஸ்வதி
சிவன் – ரேவதி
பராசக்தி – ஜனரஞ்சனி
மகாவிஷ்ணு – பௌலி
மகாலட்சுமி – மத்யமாவதி
தன்வந்திரி – ரீதிகௌல
ஹயக்ரீவர் – கல்யாணவசந்தா
முருகன் – ஷண்முகப்ரியா
நரசிம்மர் – மலயமாருதம்
பைரவர் – ப்ருந்தாவன சாரங்கா
ஆஞ்சநேயர் – குறிஞ்சி

பாடகர்கள்
மேட்டூர் சகோதரர்கள்
ஜீ.சஞ்சீவி, ஆர்.முரளி.

ராக விளக்கம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ குணசேகர பட்டாச்சார்யார்

நாதஸ்வரம்
தர்மபுரி வெங்கடாஜலம் குழுவினர்

வேதவிற்பன்னர்கள்
இராஜப்பா குழுவினர்.

மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை-632513. வேலூர் மாவட்டம்.

தொலைபேசி : 04172-230033. கைபேசி : 9443330203

No comments:

Post a Comment