Pages - Menu

Tuesday, October 15, 2013

வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு பிரார்த்தனை...

கலியுகத்தில் இயற்கையின் வாயிலாக மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் வரும் என்றும் அந்த இன்னல்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பல வழிமுறைகளையும் இறைவன் பல்வேறு அவதாரங்களாக தோன்றி நமக்கு சொல்லி வருகிறான்.

அந்த வகையில் மக்கள் எப்போதும் இறைவனிடம் ஒன்றி இருக்க வேண்டும், நற்சிந்தனை வேண்டும், தர்ம சிந்தனை வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என பல விஷயங்களை நமக்கு தெரிவித்து வருகிறான். அப்படி இறைவன் பல அவதாரங்களாய் தோன்றி கூறிய அறிவுரைகளை சிலபேர்தான் பின்பற்றி வருகிறார்கள். எனவே இயற்கை அழிவுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க வேண்டுமாயின் எப்போதும் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

ஆந்திராவை தாக்கிய பாய்லின் புயலானது அப்படியே நகர்ந்து பீகார், சத்தீஸ்கார் மாநிலங்களிலும் பெரும் மழை வெள்ளத்தையும், ஒரிசாவில் புயலோடு கூடிய மழையும் பெய்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும், மேலும் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்து அங்குள்ள மக்கள் சொல்லமுடியாத துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் அந்த துக்கத்திலிருந்து விரைவில் மீண்டு இயல்புநிலைக்கு மாறவேண்டும் என்றும், உயிரழந்தோரின் ஆத்மா சாந்தியடைவும், அவர்கள் குடும்பத்தார்களின் மனவேதனைகள் நீங்கவும் வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் நவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்தன்கார்தேவி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது. எதிர்பாராத விதமாக அந்த நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இதுபோன்ற உலகில் பலவித காரணங்களால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்காக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் தன்வந்திரி குடும்பத்தினரும், பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் கூட்டு பிராத்தனை செய்தனர்.

No comments:

Post a Comment