Pages - Menu

Wednesday, September 4, 2013

கிரக தோஷங்கள் அகல நவக்கிரக ஹோமம்....

அமாவாசையை முன்னிட்டு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  

நவக்கிரக ஹோமம்…


நவகிரகங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் அமைகிறது என்கிறது புராணங்கள்.

கொடிய தொழுநோய் வராமலிருக்கவும், பலவிதமான நோய்களிலிருந்தும், துன்பங்களிலிருந்து விடுபடவும்,கிரக மாற்றங்களினால் ஏற்படும் இன்னல்களைப் போக்கவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், திருமணம், குழந்தைபேரு, ஆயுள் விருத்தி, குடும்ப சண்டைகள், வழக்கு வியாக்யங்கள், வீடு, மனை, நிலம், பூமி போன்றவையினால் ஏற்படும் இடையூறுகள் நீங்கவும், துர் சொர்ப்பனம், துர் மரணம் போன்றவைகளால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கவும், மேலும் பலவகையான பிரச்னையிலிருந்து விடுபட இந்த நவக்கிரக நாயகர்களை வேண்டி நவக்கிரக ஹோமங்கள் செய்வதின் மூலம் கிரக தோஷங்களை போக்கிக்கொள்ள முடியும்.

அந்த வரிசையில் வருகிற 05.9.2013 வியாழக்கிழமை அன்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஹோமமாக இந்த நவக்கிரக ஹோமம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.

இந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தன்வந்திரி குடும்பத்தினர்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033

No comments:

Post a Comment