Pages - Menu

Saturday, September 21, 2013

சந்தான கோபால யாகத்தின் சிறப்பு காட்சிகள்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் 21.9.2013 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை குழந்தைபாக்யம் வேண்டி  சிறப்பு சந்தான கோபால யாகம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் குழந்தைபேறு இல்லாத தம்பதிகள் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டனர். பின்னர் நண்பகல் 1.00 மணியளவில் நாள்தோறும் நடைபெற்று வருகின்ற கோ பூஜையிலும் கலந்துகொண்டனர்.

மேலும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் தம்பதிகள் ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் மனமுருகி பிரார்த்தித்துக் கொண்டனர். பீடத்தில் அமைந்திருக்கும் இதர 65 பரிவார தெய்வங்களையும் சுற்றி சேவித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment