Pages - Menu

Sunday, September 15, 2013

கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடைபெற்றது...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 15.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1.00 மணி வரை திருமணமாகாத ஆண்களுக்கான கந்தர்வராஜ ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஹோமத்தில் தமிழகம், புதுவை, கர்நாடகா மற்றும் பல பகுதிகளில் இருந்தும் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை முன்வைத்து கூட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த ஹோமத்தின் பொழுது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஹோமத்தின் சிறப்புகள் பற்றியும், ஹோமம் நடைபெறும்பொழுது எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.

மேலும் பீடத்தில் சிறப்பு பைரவர் ஹோமம் மற்றும் சகல தேவதா ஹோமமும் நடைபெற்றது. இந்த ஹோமத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பீடத்தில் நடைபெற்று வரும் நித்திய அன்னதானத்திலும் பக்தர்கள் பங்கேற்றனர்.

பீடத்தில் நடைபெற்ற ஹோமங்களின் காட்சி

கந்தர்வராஜ ஹோமத்தின் பொழுது ஸ்வாமிகள் அருளுரை வழங்கிய காட்சி
கந்தர்வராஜ ஹோமத்தில்
ஆண்களின் ஒரு பகுதி

கந்தர்வராஜ ஹோமத்தில் ஆண்கள்
பக்தர்கள் ஹோமத்தில் மூலிகைகள்
இடும் காட்சி

பக்தர்கள் மீது கலச தீர்த்தம் சேர்க்கும் ஊற்றும் காட்சி
பக்தர்கள் மீது கலச தீர்த்தம் சேர்க்கும் ஊற்றும் காட்சி

சகல தேவதா ஹோமம் நடைபெற்ற காட்சி
சிறப்பு பைரவர் ஹோமம் நடைபெற்ற காட்சி

கோ பூஜை செய்யும் ஸ்வாமிகள்
கோ பூஜையில் பக்தர்கள் பிரார்த்தனை செய்யும் காட்சி

நித்திய அன்னதானத்தில் மகிழ்ச்சியுடன் பக்தர்கள் பங்கேற்ற காட்சி
நித்திய அன்னதானத்தில் பக்தர்கள் பிரார்த்தனை

No comments:

Post a Comment