ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 6.8.2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை முதல் மாலை வரை நடைபெற இருக்கும் நவசண்டி யாகத்தின் முன்னதாக 5.8.2013 திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் 64 யோகினிகளுக்கும், 64 பைரவர்களுக்கும் பலி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகளை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி வேத சிவாகம வித்யா பூஷணம் ஸ்ரீ ராஜப்பா சிவம், ஸ்ரீ விவேகானந்த சிவம், ஸ்ரீ ராஜீவ் சிவம் மற்றும் ரவிசங்கர் சிவாச்சாரியார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் சேவார்த்திகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment