Pages - Menu

Monday, April 13, 2015

14.4.2015 நாளை மாலை 5.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் பத்தாம் ஆண்டு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் சேவை புரியும் சேவார்த்திகளுக்கும், வருகை புரியும் பக்தர்களுக்கும் அவரவர்கள் செய்யும் பணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 14.4.2015 நாளை மாலை 5.00 மணியளவில் இராணிப்பேட்டை கோட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பலவகையான சாதனங்களைக் கொண்டு நடத்தும் பத்தாம் ஆண்டு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.



1 comment: